செய்திகள்
ப சிதம்பரம்

கொல்லப்பட்ட இந்திய பத்திரிகையாளர் பற்றி பா.ஜனதா கருத்து கூறாது - ப.சிதம்பரம் விமர்சனம்

Published On 2021-07-19 02:48 GMT   |   Update On 2021-07-19 14:19 GMT
தனிஷ் சித்திக்கின் சோக மரணம், பணவீக்க உயர்வு ஆகியவை பற்றி பா.ஜனதாவோ, தேசிய ஜனநாயக கூட்டணியோ கருத்து கூறாது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதலில் இந்திய புகைப்பட பத்திரிகையாளர் தனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-



தனிஷ் சித்திக்கின் சோக மரணம், பணவீக்க உயர்வு ஆகியவை பற்றி பா.ஜனதாவோ, தேசிய ஜனநாயக கூட்டணியோ கருத்து கூறாது. ஏனென்றால், இந்தியர்கள் பாதுகாப்பாக, வளர்ச்சியுடன், நலத்துடன் இருக்கிறார்கள் என்று அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் போலி பிம்பத்துக்கு இவை இரண்டும் எதிராக இருக்கின்றன. குறிப்பாக, நுகர்வோர் விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் நிர்ணயித்து வைத்திருந்த உச்ச அளவை தாண்டி சென்று விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News