செய்திகள்
இந்தியா-சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

சீன வெளியுறவு அமைச்சருடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய ஜெய்சங்கர்

Published On 2021-07-14 16:24 GMT   |   Update On 2021-07-14 16:24 GMT
மூத்த ராணுவ தளபதிகள் இடையேயான அடுத்த சந்திப்புக்கு இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தஜிகிஸ்தானின் துஷன்பே நகரில் ஷாங்காய் ஒத்துழமைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தஜிகிஸ்தான் சென்றுள்ளார். 

ஷாங்காய் ஒத்துழைப்பு  மாநாட்டுக்கு இடையே, சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-யை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. 

எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் மூத்த ராணுவ தளபதிகள் இடையேயான அடுத்த சந்திப்புக்கு இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக ஜெய்சங்கர் நேரில் வாங் யி-யை சந்தித்துள்ளார். இந்திய - சீன எல்லையில் பதற்றம் தொடரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News