செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனா நிவாரணம் விவகாரத்தில் மோடி அரசு, தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு - ராகுல் காந்தி கருத்து

Published On 2021-06-30 19:53 GMT   |   Update On 2021-06-30 19:53 GMT
மோடி அரசு தனது தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் கட்சியும், அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள சுப்ரீம் கோர்ட்டு, 6 வாரங்களுக்குள் இந்த நிதியை இறுதி செய்யவும், வழிகாட்டுதல்களை வகுக்கவும் அறிவுறுத்தி இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கையை ராகுல் காந்தி வரவேற்றுள்ளார்.



இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மோடி அரசு தனது தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி இருக்கிறது. இதை செயல்படுத்தினால், அது சரியான தசையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

Similar News