செய்திகள்
மந்திரி சுதாகர்

கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3,232 பேர் பாதிப்பு: மந்திரி சுதாகர் தகவல்

Published On 2021-06-29 03:04 GMT   |   Update On 2021-06-29 12:03 GMT
தடுப்பூசிகள் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுவது உண்மை இல்லை. மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசி கூடுதலாக அனுப்பி வைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு :

பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பை போன்று கருப்பு பூஞ்சை நோய்க்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 232 பேர் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களில் 387 பேர் குணமடைந்துள்ளனர். 1600-க்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 262 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த நோய்க்கான மருந்துகள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. இதனால் யாரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை.

அதுபோல், கொரோனா தடுப்பூசியும் போதுமான அளவு இருப்பு உள்ளது. தடுப்பூசிகள் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுவது உண்மை இல்லை. மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசி கூடுதலாக அனுப்பி வைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News