செய்திகள்
மம்தா பானர்ஜி

அடுத்த அஸ்திரத்தை தொடுத்த மம்தா பானர்ஜி... அதிர்ச்சி அடைந்த ஆளுநர்

Published On 2021-06-28 15:04 GMT   |   Update On 2021-06-28 15:04 GMT
வடக்கு வங்காளத்தில் ஆளுநர் திடீனெ சுற்றுப்பயணம் மேற்கொண்டது அரசியல் ஸ்டண்ட் என்றும், அங்கு பாஜகவின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்களை மட்டுமே சந்தித்ததாகவும் மம்தா குற்றம் சாட்டினார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தங்காருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாகவும், முதல்வர்-ஆளுநர் இடையே மோதல் ஏற்பட்டது. ஆளுநரை திரும்ப பெறும்படி மம்தா பானர்ஜி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஆளுநர் மீது புதிய குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார் மம்தா பானர்ஜி. ஆளுநர் ஜெகதீப் தங்கார் ஒரு ஊழல்வாதி என்றும், 1996ம் ஆண்டு ஹவாலா ஜெயின் வழக்கில் அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்ததாகவும் கூறினார். இது போன்ற ஒரு ஆளுநரை தொடர மத்திய அரசு ஏன் அனுமதித்துள்ளது? என்றும் மம்தா கேள்வி எழுப்பினார்.



வடக்கு வங்காளத்தில் ஆளுநர் திடீனெ சுற்றுப்பயணம் மேற்கொண்டது அரசியல் ஸ்டண்ட் என்றும், அங்கு பாஜகவின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்களை மட்டுமே சந்தித்ததாகவும் மம்தா குற்றம் சாட்டினார்.

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டுகளால் ஆளுநர் அதிர்ச்சி அடைந்துள்ளார். எந்தவொரு ஹவாலா ஊழலிலும் தனது பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை என்றும்,  ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதியிடமிருந்து இந்த குற்றச்சாட்டை எதிர்பார்க்கவில்லை என்றும், ஆளுநர் தங்கார் செய்தியாளர்களிடம் கூறினார்.
Tags:    

Similar News