செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் பக்தர்களின் பை, பெட்டிகளை சோதனையிட ஸ்கேன் மையங்கள் தொடக்கம்

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் பக்தர்களின் பை, பெட்டிகளை சோதனையிட ஸ்கேன் மையங்கள் தொடக்கம்

Published On 2021-06-28 02:05 GMT   |   Update On 2021-06-28 02:05 GMT
பக்தர்களின் வசதிக்காகவும், கோவிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கோவிலின் முதல் மற்றும் 4-வது கோபுரம் அருகில் பக்தர்களின் உடைமைகள் அடங்கிய பை, பெட்டிகளை சோதனையிட ஸ்கேன் மையங்கள் அமைக்கப்பட்டன.
ஸ்ரீகாளஹஸ்தி :

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வழிபடவும், ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜை செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் உடை மற்றும் உடைமைகள் அடங்கிய பைகள், பெட்டிகள் ஆகியவற்றை பக்தர்கள் கோவிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

இதனால் பக்தர்கள் கோவிலுக்கு அருகில் உள்ள பொருட்கள் பாதுகாப்பு அறையில் டோக்கன் பெற்று பைகள், பெட்டிகளை வைத்து விட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் டோக்கனை திரும்ப வந்து ஒப்படைத்து பை, பெட்டிகளை பெற்றுச் செல்வார்கள்.

இந்தநிலையில் பக்தர்களின் வசதிக்காகவும், கோவிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கோவிலின் முதல் மற்றும் 4-வது கோபுரம் அருகில் பக்தர்களின் உடைமைகள் அடங்கிய பை, பெட்டிகளை சோதனையிட ஸ்கேன் மையங்கள் அமைக்கப்பட்டன.

அந்த மையங்களை நேற்று ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன் ரெட்டி தொடங்கி வத்தார். நிகழ்ச்சியில் கோவில் அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஸ்கேன் மையங்களுக்கு அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜை செய்தனர்.
Tags:    

Similar News