செய்திகள்
கைது செய்யப்பட்ட தேபஞ்சன் தேவ்

போலி தடுப்பூசி முகாம்கள் -முக்கிய குற்றவாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு

Published On 2021-06-26 13:25 GMT   |   Update On 2021-06-26 13:47 GMT
கொல்கத்தாவில், ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த தேபஞ்சன் தேவ் என்பவர், போலி தடுப்பூசி முகாம் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. தடுப்பூசியின் அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போடுகின்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி போலி தடுப்பூசி முகாம்களை நடத்தி, மக்களிடம் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. மும்பையில் சுமார் 3000 பேருக்கு போலியாக தடுப்பூசி செலுத்தப்பட்டது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் 
கொல்கத்தாவில்
, ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த தேபஞ்சன் தேவ் என்பவர், போலி தடுப்பூசி முகாம் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்திய முகாம்களில் கொரோனா தடுப்பூசிக்கு பதில், ஆன்டிபயாடிக் ஊசி போட்டது தெரியவந்துள்ளது. இந்த மோசடிக்கு உதவியாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 



கைது செய்யப்பட்ட தேபஞ்சன் தேவ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படலாம் என தெரிகிறது. இதுபற்றி கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியிருக்கலாம் என தெரிகிறது. மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது என கூறியதாக தெரிகிறது. 


இவர்களின் போலி தடுப்பூசி முகாம்களில் ஊசி போட்டவர்கள் தொடர்பான தகவல் திரட்டப்பட்டு வருகிறது. அவர்களில் தகுதிவாய்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News