செய்திகள்
ஏர் பூட்டி நிலத்தை உழுத ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.

ஏர் பூட்டி நிலத்தை உழுத ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.

Published On 2021-06-25 02:42 GMT   |   Update On 2021-06-25 02:42 GMT
தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா ஏர் பூட்டி நிலத்தை உழுத புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
சிக்கமகளூரு :

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் ரேணுகாச்சார்யா. இவர் முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளரும் ஆவார்.

கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தது, கொரோனாவுக்கு இறந்த நோயாளியின் உடலை ஆம்புலன்சில் எடுத்து சென்றது, கொரோனா நோயாளிகள் குணம் அடைய சிறப்பு யாகம் நடத்தியது என கடந்த சில தினங்களாக ரேணுகாச்சார்யாவின் பெயர் அடிக்கடி பத்திரிகைகளில் இடம் பெற்று வருகிறது. தற்போது அவர் ஏர் பூட்டி நிலத்தை உழுதது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

அதாவது ஒன்னாளி தாலுகா ஆரபகட்டே கிராமத்தில் நேற்று ரேணுகாச்சார்யா காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்தப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயியான ரங்கநாத் என்பவர் ஏர் பூட்டி உழுது கொண்டு இருந்தார்.

இதனை கவனித்த ரேணுகாச்சார்யா தனது காரில் இருந்து இறங்கி விளைநிலத்திற்கு சென்றார். பின்னர் ரங்கநாத்திடம் இருந்து ஏரை வாங்கி ரேணுகாச்சார்யா நிலத்தை உழுதார். இதுதொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
Tags:    

Similar News