செய்திகள்
நீடா அம்பானி

சுரக்‌ஷா தடுப்பூசி திட்டம் மூலம் 20 லட்சம் பேருக்கு இலவச தடுப்பூசி: நீடா அம்பானி

Published On 2021-06-24 10:08 GMT   |   Update On 2021-06-24 10:08 GMT
ரிலையன்ஸ் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், பார்ட்னர் நிறுவனத்தில் பணிபுரிவோர் என 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் பணக்கார பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். இவரின் மனைவி நீடா அம்பானி, ரிலையன்ஸ் பவுண்டேசனின் தலைவராகவும், நிறுவனராகவும் உள்ளார்.

ரிலையன்ஸின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நீடா அம்பானி, ‘‘ரிலையன்ஸ் சுரக்‌ஷா தடுப்பூசி என்ற திட்டத்தின் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள், அவர்களின் பார்ட்னர் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்கள் என 20 லட்சம் பேருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும். இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனத்தின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக இது இருக்கும்.

இந்தியாவில் வேகமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள ரிலையன்ஸ் பவுண்டேசன் 109 நகரத்தில் 116 கொரோனா தடுப்பூசி மையத்தை உருவாக்கியுள்ளது. இதற்காக JioHealthHub பிளாட்பாரத்தை உருவாக்கியுள்ளோம். இதில் பதிவு செய்து ஒரு கிளிக் செய்தால் சான்றிதழ் கிடைத்துவிடும்.

பதிவு செய்த அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வழிவகை செய்யப்படும். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் இந்த பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 நாளைக்குள் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இந்த எண்ணிக்கை உயர்த்துவதற்கான தொடர்ந்து பணிபுரிந்து வருகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News