செய்திகள்
ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் பாராளுமன்ற நிலைக்குழு கூட்டம்- பாஜக எம்பிக்கள் வெளியேறியதால் பரபரப்பு

Published On 2021-06-23 17:29 GMT   |   Update On 2021-06-23 17:29 GMT
பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் தடுப்பூசி கொள்கைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.
புதுடெல்லி:

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான பாராளுமன்ற நிலைக்குழு இன்று கூடியது. குழுவின் தலைவரான காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா வைரசின் மரபணு வரிசைமுறை மற்றும் அதன் வகைகள் குறித்து உறுப்பினர்களுடன் விவாதித்தார். 

அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் தடுப்பூசி கொள்கைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் விருப்பம் தெரிவித்தனர். இதனை பாஜக எம்.பி.க்கள் ஏற்கவில்லை. இந்த விவகாரம் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதால், நிலைக்குழு தலைவரிடம் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அத்துடன், தடுப்பூசி கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரலில் இல்லாத பிற விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி பாஜக எம்.பி.க்கள் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினர். தடுப்பூசி கொள்கையை அரசியலாக்குவதாக குற்றம்சாட்டினர். பாஜக எம்பிக்கள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

குழுத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ராஜினாமா செய்வதாகக் கூறிய பின்னரே, பாஜக உறுப்பினர்கள் திரும்பி வந்து கூட்டத்தில் பங்கேற்றனர். அதன்பின்னர் விவாதம் நடைபெற்றது.
Tags:    

Similar News