செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான ரிட் மனுக்கள் தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2021-06-22 23:08 GMT   |   Update On 2021-06-22 23:08 GMT
மதிப்பெண் மதிப்பீடு முடிவுகளையும், விருப்பத்தேர்வு முடிவுகளையும் ஒன்றாக வெளியிட வேண்டும் என்ற யோசனையை ஏற்கமுடியாது என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக உத்தரபிரதேச பெற்றோர் சங்கம் மற்றும் மாணவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-

மதிப்பெண் மதிப்பீடு முடிவுகளையும், விருப்பத்தேர்வு முடிவுகளையும் ஒன்றாக வெளியிட வேண்டும் என்ற யோசனையை ஏற்கமுடியாது. அகமதிப்பீட்டு மதிப்பெண் முறையை ஏற்க மாணவர்களுக்கு அதற்கான முடிவுகள் ஜூலை 31-ந்தேதிக்குள் வெளியிடப்படும். குறைவான மதிப்பெண்கள் பெற்றால், விருப்பத்தேர்வை எழுதிக்கொள்ளலாம்.

மாணவர்கள் நலன் கருதியே, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. வாரியங்கள் ரத்து செய்துள்ளன.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. ஐ.சி.எஸ்.இ. அறிவித்த மதிப்பெண் மதிப்பீடு முறை நியாயமாகவும், முறையாகும் உள்ளது. எனவே அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை.

கம்பார்ட்மெண்ட் தேர்வு எழுதுவோருக்கு ஆகஸ்டு 15 முதல் செப்டம்பர் 15 வரையிலான காலகட்டத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்து, ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News