செய்திகள்
டுவிட்டர்

சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம்- டுவிட்டர் இந்தியா தலைவரை நேரில் ஆஜராக போலீஸ் உத்தரவு

Published On 2021-06-21 14:58 GMT   |   Update On 2021-06-21 14:58 GMT
சர்ச்சைக்குரிய வீடியோவை பலருக்கு பகிர்ந்தது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் உள்ளிட்ட 3 நிறுவனங்கள், 6 நபர்கள் மீது காசியாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காசியாபாத்:

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 72 வயது முதியவர் அப்துல் சமத் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் தரதரவென இழுத்துச் சென்று, தாடியை சேவ் செய்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. 

இதைப் பார்த்த பலரும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கடுமையான கருத்துக்களை பதிவிட்டனர். வகுப்புவாத கோணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது. எனினும் இந்த வீடியோவை டுவிட்டர் நிறுவனம் நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. 



எனவே, சர்ச்சைக்குரிய வீடியோவை பலருக்கு பகிர்ந்தது தொடர்பாக 
டுவிட்டர்
 நிறுவனம் உள்ளிட்ட 3 நிறுவனங்கள், 6 நபர்கள் மீது காசியாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டுவிட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மணீஷ் மகேஷ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக வீடியோ கால் மூலம் ஆஜராவதாக டுவிட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மணீஷ் மகேஷ்வரி கூறியிருந்தார். ஆனால், வீடியோ கால் வேண்டாம், வியாழக்கிழமை நேரில் ஆஜராகவேண்டும் என காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 
Tags:    

Similar News