செய்திகள்
கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது: 120 பேர் பலி

Published On 2021-06-21 04:15 GMT   |   Update On 2021-06-21 04:15 GMT
ஒரே நாளில் 8 ஆயிரத்து 456 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதை அடுத்து, கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 45 ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூரு :

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 74 ஆயிரத்து 521 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4,517 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 6 ஆயிரத்து 453 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு நேற்று 120 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 8 ஆயிரத்து 456 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதை அடுத்து,
கொரோனா
வில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 45 ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 813 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 2.58 சதவீதமாக ஆக உள்ளது.

பெங்களூரு நகரில் 933 பேர், பாகல்கோட்டையில் 10 பேர், பல்லாரியில் 67 பேர், பெலகாவியில் 201 பேர், பெங்களூரு புறநகரில் 111 பேர், பீதரில் 6 பேர், சாம்ராஜ்நகரில் 61 பேர், சிக்பள்ளாப்பூரில் 123 பேர், சிக்கமகளூருவில் 183 பேர், சித்ரதுர்காவில் 74 பேர், தட்சிண கன்னடாவில் 525 பேர்,

தாவணகெரேயில் 136 பேர், தார்வாரில் 77 பேர், கதக்கில் 28 பேர், ஹாசனில் 346 பேர், ஹாவேரியில் 24 பேர், கலபுரகியில் 9 பேர், குடகில் 137 பேர், கோலாரில் 77 பேர், கொப்பலில் 61 பேர், மண்டியாவில் 131 பேர், மைசூருவில் 545 பேர், ராய்ச்சூரில் 19 பேர், ராமநகரில் 12 பேர், சிவமொக்காவில் 141 பேர், துமகூருவில் 144 பேர், உடுப்பியில் 167 பேர், உத்தரகன்னடாவில் 146 பேர், விஜயாப்புராவில் 7 பேர், யாதகிரியில் 16 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் 12 பேரும், பல்லாரியில் 12 பேரும், தட்சிண கன்னடா, தார்வாரில் தலா 11 பேரும், ஹாசன், ஹாவேரியில் தலா 5 பேரும், கோலாரில் 4 பேரும், மண்டியாவில் 8 பேரும், மைசூருவில் 17 பேரும், சிவமொக்காவில் 5 பேரும் என மொத்தம் 120 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையில் முதல் முறையில் வைரஸ் பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News