செய்திகள்
பிரதமர் மோடி

ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் ரைசிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2021-06-20 19:03 GMT   |   Update On 2021-06-20 19:03 GMT
ஈரான் நாட்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக இருந்து வரும் இப்ராகிம் ரைசி அந்நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:

ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நள்ளிரவு 2 மணி வரை நடந்தது.

அதிபர் பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் அப்தூல் நாசர் ஹெம்மாட்டி, முன்னாள் ராணுவ தளபதி முகசன் ரஜாய் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் உசேன் காஜிஜடேஹசேமி ஆகிய 4 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.



இந்நிலையில், ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் ரைசிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இப்ராகிம் ரைசிக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News