செய்திகள்
கோப்புபடம்

கொரோனா 3-வது அலையை தடுக்க டெல்லி போலீஸ் புதிய யுக்தி

Published On 2021-06-20 01:31 GMT   |   Update On 2021-06-20 01:31 GMT
கொரோனா 3-வது அலையைத் தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் பொது சுகாதார மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படும் என்று டெல்லி காவல் துறை ஆணையா் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதை தீவிரப்படுத்துவது குறித்து டெல்லி காவல் துறை ஆணையா் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

அப்போது, மாவட்டம், தானா அளவிலான பொது சுகாதார மேலாண்மைய குழுக்களை அமைத்து கொரோனா 3-வது அலையைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். இந்தக் குழுவினா் பொது சுகாதார அவசர நிலை அறிவுறுத்தல்கள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு செல்வது, முதியோருக்கான உதவி, ஏழைகளுக்கு ரேஷன் பொருள்கள் சென்றடைவது உள்ளிட்ட பல்வேறு வகையான விவகாரங்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். போலீசார் அபராதம் விதித்தாலும் மக்கள் 100 சதவீதம் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.



ஆகையால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றும் வகையில் இந்தக் குழுவினா் தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று டெல்லி காவல் துறை ஆணையா்  ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.
Tags:    

Similar News