செய்திகள்
மாமரத்திற்கு பாதுகாப்பு

இரண்டு மாமரங்களுக்கு 4 பேர், 6 நாய்கள் பாதுகாப்பு: அப்படி அந்த மரத்தில் என்னதான் விசேசம்...

Published On 2021-06-17 16:38 GMT   |   Update On 2021-06-17 16:38 GMT
மத்திய பிரதேசம் ஜபால்பூரில் ஒரு தம்பதி இரண்டு மாமரங்களுக்கு நான்கு பேரை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் ராணி- சங்கல்ப் பரிஹார் தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னைக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்து ஒருவரும் இரண்டு மாமரம் கன்றுகளை  வாங்கியுள்ளனர். அதை வீட்டின் அருகில் உள்ள தோட்டதில் வைத்து வளர்த்துள்ளனர்.

மற்ற மாமரங்களை போன்று மஞ்சள் கலந்து சிகப்பு நிறத்தில் பழங்களை தரும் என எண்ணினர். ஆனால், அந்த மாமரத்தின் பழங்கள் ரூபி ரெட் கலரில் இருந்துள்ளது.

இதற்கு முன் இதுபோன்று பார்க்கவில்லையே என ஆச்சர்யம் அடைந்துள்ளனர். அருகில் உள்ளவர்களிடம் இது குறித்து கேட்க, உரிய விடைகிடைக்கவில்லை. இறுதியாக ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அது மியாஜாகி மாம்பழங்கள் எனத் தெரியவந்தது.

இந்த மாம்பலம் மிகவும் அரிய வகை மாம்பழமாம். இதை அறிந்த அருகில் உள்ளவர்கள் மாம்பழங்களை திருடிச் சென்று விட்டனர். இதனால் ராணி- சங்கல்ப் பரிஹார் தம்பதி மாம்பழங்களை திருடாமல் இருக்க நான்கு பேரை காவலுக்கு நிறுத்தியுள்ளனர். அத்துடன் 6 நாய்களையும் காவலுக்கு வைத்துள்ளனர். தற்போது மரத்தில் ஏழு காய்கள் உள்ளன. பழமாகிய பின்னர், மேலும் மரங்களை உருவாக்குவதற்கா பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என அந்த தம்பதி தெரிவித்துள்ளது.

காவல் போடும் அளவிற்கு அந்த மாம்பழத்தில் விசயம் உள்ளது. மியாஜாகி என அழைக்கப்படும் இந்த வகை மாம்பழங்களில் தோற்றம் ஜப்பானின் மியாஜாகி நகரமாகும். வேறெங்கும் இந்த மாமரம் கிடையாது.

சூரியனின் முட்டை என அறியப்படும் இந்த வகை மாம்பழங்கள் ஒரு கிலோ 2.70 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுமாம். ஒரு மாம்பழத்தின் விலை சுமார் 21 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமானதாம். ஒரு மாம்பழம் சுமார் 350 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம்.
Tags:    

Similar News