செய்திகள்
கோப்புப்படம்

தடுப்பூசி போட்டவர்களை பீதியடைய வைக்கும் பகீர் தகவல்

Published On 2021-06-17 05:24 GMT   |   Update On 2021-06-17 08:00 GMT
கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் பேராபத்து ஏற்படும் என கூறி வைரலாகும் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.


கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முதற்கட்டமாக செய்ய வேண்டியது தடுப்பூசி எடுத்துக் கொள்வது தான் என அரசாங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எதிர்காலத்தில் அனஸ்தீசியா பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவர்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என கூறும் பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் அனஸ்தீசியா சார்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ள மேலும் ஒருமாத காலம் காத்திருக்க வேண்டும் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், இதுபோன்ற தகவல் அறிவியல் பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. எனினும், தடுப்பூசியின் இரு டோஸ்களின் பலன்களை முழுமையாக பெற அதனை எடுத்துக் கொண்டவர்களுக்கு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதை பரிந்துரைப்பதில்லை. அந்த வகையில் வைரல் தகவல் இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News