செய்திகள்
கோப்புப்படம்

தேசிய சராசரியை விட அதிக விகிதம் : தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பழங்குடியினர் சாதனை

Published On 2021-06-16 02:07 GMT   |   Update On 2021-06-16 02:07 GMT
தேசிய அளவில் தடுப்பூசி செலுத்தியோர் சராசரி 10 லட்சம் பேருக்கு 1 லட்சத்து 68 ஆயிரத்து 951 ஆகும் என மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச்சி பெற்று வருகின்றன. மக்களிடம் தடுப்பூசி பற்றிய தயக்கம்போய் ஊக்கமும், முனைப்பும் வந்துள்ளது.

இந்த தருணத்தில் 176 பழங்குடி மாவட்டங்களில் 128 மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தேசிய சராசரி அளவை விட இங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது. தேசிய அளவில் தடுப்பூசி செலுத்தியோர் சராசரி 10 லட்சம் பேருக்கு 1 லட்சத்து 68 ஆயிரத்து 951 ஆகும்.



இதுவே பழங்குடி மாவட்டங்களில் 10 லட்சத்துக்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 375 ஆக உள்ளது. இது கடந்த 3-ந் தேதி நிலவரம் ஆகும்.

இதேபோன்று ஆன்லைனில் தடுப்பூசி பதிவு சராசரி 81.19 சதவீதம் ஆகும். ஆனால் பழங்குடி மாவட்டஙக்ளில் நேரில் வந்து தடுப்பூசி போடுவோர் சராசரி 88.12 சதவீதம் ஆகும்.

இது பழங்குடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் ஆர்வம் காட்டுவதை படம் பிடித்துக்காட்டுகிறது.
Tags:    

Similar News