செய்திகள்
கொரோனா வைரஸ்

2-வது அலையை விட மோசமான நிலை ஏற்படும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Published On 2021-06-16 01:43 GMT   |   Update On 2021-06-16 07:28 GMT
மக்கள் கொரோனா கால வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், 2-வது அலையை விட மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
புதுடெல்லி:

டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் குறைந்துள்ளது. இதனால் மாநில அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. சந்தைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் நெருக்கமாக கூடி வரத்தொடங்கி உள்ளனர்.

ஆனால், மக்கள் கொரோனா கால வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், 2-வது அலையை விட மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுபற்றி டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மூத்த டாக்டர் சுரன்ஜித் சாட்டர்ஜி கூறும்போது, “கொரோனா கால பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால், மீறல்கள் ஏற்பட்டால், விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தாவிட்டால் எங்களுக்கு மீண்டும் பிரச்சனைதான்” என குறிப்பிட்டார்.

“மக்கள் முக கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல், சட்டம் ஒழுங்கை அமல்படுத்துவோர் அவர்களுக்கு அபராதம் விதிக்கவில்லை என்றால், நிச்சயமாக பிரச்சனை ஏற்படும். இரண்டாவது அலையை விட மோசமான நிலை ஏற்படும்” என்றும் அவர் எச்சரித்தார்.

போர்ட்டீஸ் ஆஸ்பத்திரியின் நுரையீரல் மருத்துவ நிபுணர் டாக்டர் ரிச்சா சரீனும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News