செய்திகள்
கோப்புப்படம்

இன்னும் 2 நாளில் மாநிலங்களுக்கு 47 லட்சம் தடுப்பூசி வினியோகம்

Published On 2021-06-15 19:35 GMT   |   Update On 2021-06-15 19:35 GMT
மாநிலங்களின் கையிருப்பில் 1 கோடியே 5 லட்சத்து 61 ஆயிரத்து 861 டோஸ் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 26 கோடியே 69 லட்சத்து 14 ஆயிரத்து 930 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. இவற்றில் இதுவரை 25 கோடியே 67 லட்சத்து 21 ஆயிரத்து 69 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

1 கோடியே 5 லட்சத்து 61 ஆயிரத்து 861 டோஸ் தடுப்பூசிகள், மாநிலங்களின் கையிருப்பில் உள்ளன.

இன்னும் 2 நாட்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 47 லட்சத்து 43 ஆயிரத்து 580 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News