செய்திகள்
சிராக் பஸ்வான்

சித்தப்பா சதியில் சிக்கிய சிராக் பஸ்வான்: லோக் ஜனசக்தி கட்சியில் அடுத்தடுத்து பரபரப்பு நிகழ்வுகள்

Published On 2021-06-15 12:18 GMT   |   Update On 2021-06-15 12:18 GMT
சிராக் பஸ்வானுக்கு எதிராக ஐந்து எம்எல்ஏ-க்கள் திரும்பியதால், லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவர் பதவி கேள்விக்குறியாக உள்ளது.
பீகார் மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்று லோக் ஜனசக்தி. இந்த கட்சியின் தலைவராக ராம் விலாஸ் பஸ்வான் இருந்தார். மத்திய அமைச்சராக இருந்த பஸ்வான் காலமானதைத் தொடர்ந்து அவரது மகன் சிராஜ் பஸ்வான் அந்த கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த கட்சிக்கு சிராக் பஸ்வானுடன் 6 எம்.பி.க்கள் உள்ளனர்.

இதில் ஐந்து எம்.பி.க்கள் சிராக் பஸ்வானுக்கு எதிராக திரும்பினர். அவர்கள் பாராளுமன்றத்திற்கான லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக பஸ்வானின் இளைய சகோதரரான பசுபதிகுமார் பஸ்வானை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்தனர். அதை மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

இதனால் சிராக் பஸ்வானுக்கு சிக்கல் ஏற்பட்டது. சித்தப்பாவை வீட்டில் சென்று சந்தித்த முயற்சி செய்தார். ஆனால் அவர் சந்திக்கவில்லை.



இந்த நிலையில் இன்று திடீரென சிராக் பஸ்வான் தேசிய தலைவர் பதவியில் இருந்து நிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தேசிய செயற்குழு தலைவராக சுராஜ்பன் சிங் நியமிக்கப்பட்டதாகவும், தேசிய தலைவரை நியமிக்க தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதேவேளையில், சிராஜ் பஸ்வான் ஆதரவாளர்கள், தேசிய நிர்வாகக்குழு கூட்டப்பட்டதாகவும், அதில் ஐந்து எம்.பி.க்களை கட்சியில் இருந்து நீக்கியதாகவும் தெரிவித்துள்ளது. கட்சியில் தற்போது நடைபெற்று வருவது துரோகம் என அழைக்கப்படும் என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராஜு திவாரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News