செய்திகள்
கோவேக்சின்

கோவேக்சின் தடுப்பூசி தனியாருக்கு அதிக விலைக்கு வழங்குவது ஏன்?- பாரத் பயோடெக் விளக்கம்

Published On 2021-06-15 10:04 GMT   |   Update On 2021-06-15 10:04 GMT
கோவேக்சின் தடுப்பூசியின் விலை தனியார் மார்க்கெட்டில் கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகியவற்றின் விலையை விட மிக அதிகமாக உள்ளது.
பிரதமர் மோடி நாட்டில் உள்ள தகுதியான அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்றார். மேலும், மத்திய அரசு உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீதம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும். 25 சதவீதங்களை தனியார் மார்க்கெட்டில் விற்பனை செய்யலாம் என அறிவித்தார்.

தனியார் மருத்துவனைகளில் தடுப்பூசி போட விருப்பம் உள்ளவர்கள் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான தனியார் மருத்துவமனைகளில் சேவைக்கட்டணத்துடன் கூடிய கொரோனா தடுப்பூசி விலைப்பட்டியலை தயாரிப்பு நிறுவனம் விலை அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்டது.

அதன்படி ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரூ.948 விலையுடன் ஜிஎஸ்டி-யாக ரூ.47 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.1145-க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவேக்சின் தடுப்பூசியை ரூ.1200 விலையுடன் ஜிஎஸ்டி ரூ.60 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.1410-க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதேபோல் கோவிஷீல்டு தடுப்பூசியானது ரூ.600 விலையுடன் ஜிஎஸ்டி ரூ.30 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.780-க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு கோவோக்சின் தடுப்பூசியின் விலை உள்ளது.

இந்த நிலையில் தனியார் மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கான காரணத்தை பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


‘‘மத்திய அரசுக்கு போட்டியில்லா விலையாக ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு வழங்குகிறோம். இதனால் உற்பத்தி திறன் பாதிக்கிறது. நீண்ட நாட்கள் இவ்வாறு வழங்க முடியாது. உற்பத்தி திறன் பாதிப்பை சரிகட்டவே, தனியார் மார்க்கெட் விலையை உயர்த்தியுள்ளோம்’’ எனத் தெரிவித்துள்ளது’’ என விளக்கம் அளித்துள்ளது.
Tags:    

Similar News