செய்திகள்
கோப்புப்படம்

6-12 வயதினருக்கான தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் தேர்வு

Published On 2021-06-14 22:47 GMT   |   Update On 2021-06-14 22:47 GMT
12 முதல் 18 வயதிலான குழந்தை தன்னார்வலர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முதல் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்பட்டு வருகிறது.

ஆனால் 2 முதல் 18 வயதினருக்கு இந்த தடுப்பூசியை போடும்முன், ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்படும் இதற்கான மருத்துவ பரிசோதனையை முடிக்க வேண்டும்.

மூன்று கட்டமாக நடைபெறும் அந்த பரிசோதனையில் 12-18, 6-12, 2-6 வயது பிரிவுகளில் தலா 175 தன்னார்வலர்களுக்கு மருந்து செதுத்தி பரிசோதிக்கப்படும்.

இதில் 2-ம் கட்ட பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் கடந்த மே 12-ந் தேதி அனுமதி அளித்தார்.

அதன்படி, 12 முதல் 18 வயதிலான குழந்தை தன்னார்வலர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முதல் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்தபடியாக 6-12 வயது பிரிவில் பரிசோதனை மேற்கொள்வதற்கு தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணி டெல்லி எய்ம்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
Tags:    

Similar News