செய்திகள்
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 25 கோடியை கடந்தது

Published On 2021-06-14 22:11 GMT   |   Update On 2021-06-14 22:11 GMT
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 3-ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது.
 
இதையடுத்து ஜனவரி 16-ம் தேதி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்களும் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் நேற்று இரவு 7 மணி தரவுகளின் படி 25 கோடியே 87 லட்சத்து 13ஆயிரத்து 321 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News