செய்திகள்
மம்தா பானர்ஜி

‘ஒரே நாடு, ஒரே ரேசன்’ திட்டத்தை நடைமுறை படுத்துவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை- மம்தா பானர்ஜி

Published On 2021-06-14 12:04 GMT   |   Update On 2021-06-14 12:04 GMT
தயவு செய்து சாக்குபோக்கு கூற வேண்டாம், திட்டத்தை அமல்படுத்துங்கள் என மேற்கு வங்காள அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேசன் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி ஒருவர் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், மற்றொரு பகுதிக்குச் செல்லும்போது ரேசன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்தன.

மேற்கு வங்காளம், டெல்லி உள்பட மூன்று மாநிலங்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் இணையவில்லை. கடந்த வாரம் இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் கருத்து ஒன்றை வெளியிட்டது. அப்போது ‘‘தயவு செய்து சாக்குபோக்கு கூற வேண்டாம். ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் இணையுங்கள்’’ என மேற்கு வங்காளத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் ‘‘ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இத்திட்டம் பரிசீலனையில் உள்ளது’’ என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News