செய்திகள்
ஆயிஷா சுல்தானா

தேசத்துரோக வழக்கு- முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார் ஆயிஷா சுல்தானா

Published On 2021-06-14 09:28 GMT   |   Update On 2021-06-14 09:28 GMT
தனக்கு ஒருபோதும் மத்திய அரசுக்கு எதிராக அதிருப்தியையோ அல்லது வெறுப்பையோ தூண்டும் எண்ணம் இல்லை என்று ஆயிஷா சுல்தானா கூறி உள்ளார்.
திருவனந்தபுரம்:

லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் படேல், அங்குள்ள மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாகவும், அதிரடி மாற்றங்கள் என்ற பெயரில் தவறான முடிவுகளை அமல்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அவர் செய்துவரும் பல்வேறு சீர்திருத்தங்கள் லட்சத்தீவில் பூர்வகுடிகளாக வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், லட்சத்தீவைச் சேர்ந்த நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானா, டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றார். அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.  இதையடுத்து, முன்ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் ஆயிஷா சுல்தானா மனு தாக்கல் செய்துள்ளார். 



ஐகோர்ட் மூத்த வழக்க்கறிஞர் விஜயபானு மூலம் அவர் தனது மனுவை தாக்கல் செய்தள்ளார். அந்த மனுவில், தனக்கு ஒருபோதும் மத்திய அரசுக்கு எதிராக அதிருப்தியையோ அல்லது வெறுப்பையோ தூண்டும் எண்ணம் இல்லை என்றும் கூறி உள்ளார். 

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கு "தவறானது மற்றும் நியாயமற்றது" என்று கூறி, லட்சத்தீவில் உள்ள பல பா.ஜனதா தலைவர்கள் ராஜினாமா செய்து உள்ளனர். ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும் என கேரள மந்திரி சிவன்குட்டி வலியுறுத்தி உள்ளார். 
Tags:    

Similar News