செய்திகள்
பெட்ரோல், டீசல்

வரலாறு காணாத உச்சம் - ராஜஸ்தானில் டீசல் விலை ரூ.100 ஆக உயர்வு

Published On 2021-06-13 01:10 GMT   |   Update On 2021-06-13 01:10 GMT
இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. நேற்றும் பெட்ரோலுக்கு 27 காசுகளும், டீசலுக்கு 23 காசுகளும் அதிகரித்து இருந்தது. இது கடந்த மே 4-ந் தேதிக்கு பிறகு அதிகரிப்பது 23-வது முறையாகும். இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விட்டது.

அந்த வகையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா, லடாக் ஆகிய மாநிலங்களில் ரூ.100-க்கு அதிகமாக பெட்ரோல் விற்கப்படுகிறது.இந்த வரிசையில் 7-வது மாநிலமாக கர்நாடகாவும் இணைந்து விட்டது. அங்கும் பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியிருக்கிறது. அங்குள்ள பிதர், பெல்லாரி, கொப்பல், சிமோகா, சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்திருக்கிறது.

இதற்கிடையே ராஜஸ்தானில் டீசல் விலையும் நேற்று ரூ.100-ஐ தொட்டு விட்டது. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News