செய்திகள்
கோப்புப்படம்

கோவிஷீல்டு போட்டுக் கொண்ட மணமகன் தேவை - வைரலாகும் விளம்பரம்

Published On 2021-06-11 05:20 GMT   |   Update On 2021-06-11 05:20 GMT
செய்தி தாள் ஒன்றில் வெளியானது போன்று காட்சியளிக்கும் மணமகன் தேவை விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிடுவோர் ஏகப்பட்ட கன்டிஷன்களை முன்வைப்பர். தனது வாழ்க்கை துணை இப்படித் தான் இருக்க வேண்டும் என மணமகன், மணமகள் இருவரும் நீண்ட பட்டியலுடன் வரன் தேடும் முறை நமக்கு பழகிப் போன விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. 

செய்தி தாள் ஒன்றில், கோவஷீல்டு இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட சுயமாக சம்பாதிக்கும் ரோமன் கத்தோலிக் பெண் தனக்கு வரப்போகும் கணவரும் கோவிஷீல்டு இரு டோஸ்களையும் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என விளம்பரம் கொடுத்திருக்கிறார். 



இதனை சஷி தரூர், விரைவில் இதுவும் சகஜமாகிவிடுமோ எனும் கேள்வியுடன் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். விளம்பர பதிவை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. இதே விளம்பரத்தை மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும் பதிவிட்டுள்ளனர்.

உண்மையில் இந்த விளம்பரம் வலைதளம் ஒன்றில் போலியாக உருவாக்கப்பட்டது ஆகும். இந்த வலைதளத்தில் செய்தி தாள் விளம்பரம் போன்றே பயனர்கள் தங்களது விவரங்களை பதிவிட்டு அவற்றை செய்தியாக தோன்றும் படி பெற்றுக் கொள்ளலாம்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News