செய்திகள்
கோப்புப்படம்

தடுப்பூசி போட்டால் 20 கிலோ அரிசி இலவசம்

Published On 2021-06-09 21:50 GMT   |   Update On 2021-06-09 21:50 GMT
தடுப்பூசி போட்டால் பக்கவிளைவுகள் ஏற்படும், ஊசி போடும்போது உடலுக்குள் ‘சிப்’ வைத்து விடுவார்கள் என்றெல்லாம் பயந்து கொண்டு யாரும் தடுப்பூசி போட முன்வரவில்லை.
இடாநகர்:

அருணாசலபிரதே மாநிலம் லோயர் சுபன்சிறி மாவட்டத்தில் யாழலி வட்டம் உள்ளது. அங்குள்ள கிராமங்களில் 45 வயதை தாண்டியவர்கள் 1,399 பேர் உள்ளனர். ஆனால், கொரோனா தடுப்பூசி குறித்த வதந்தியால், அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கினர்.

தடுப்பூசி போட்டால் பக்கவிளைவுகள் ஏற்படும், ஊசி போடும்போது உடலுக்குள் ‘சிப்’ வைத்து விடுவார்கள் என்றெல்லாம் பயந்து கொண்டு யாரும் தடுப்பூசி போட முன்வரவில்லை.

இதனால், அந்த வட்டத்தின் அதிகாரி தஷி வங்சுக் தாங்டோக்குக்கு ஒரு யோசனை உதித்தது. தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு தலா 20 கிலோ அரிசி இலவசம் என்று அறிவித்தார். இந்த சலுகை, கடந்த 7-ந் தேதி அமலுக்கு வந்தது.

இந்த அறிவிப்புக்கு நல்ல பலன் கிடைத்தது. இதுவரை அந்த வட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் 80 பேர் தடுப்பூசி போட்டு இலவச அரிசியை வாங்கிச் சென்றனர். மோசமான வானிலையையும் மீறி, தொலைதூர கிராமங்களில் இருந்து அவர்கள் கால்நடையாகவே வந்தனர்.
Tags:    

Similar News