செய்திகள்
சோனியா காந்தி

இப்படி ஒரு புத்தகமா? வைரலாகும் சோனியா காந்தி புகைப்படம்

Published On 2021-06-03 05:18 GMT   |   Update On 2021-06-03 05:18 GMT
சோனியா காந்தி எப்படிப்பட்டவர் என புரிகிறதா? எனும் கேள்வியுடன் அவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சோனியா காந்தியின் பின்புற அலமாறியில் வைக்கப்பட்டு இருந்த “How to Convert India into Christian Nation” (இந்தியாவை எப்படி கிறிஸ்துவ நாடாக மாற்றுவது) புத்தகம் அடங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இத்துடன் பைபிள் மற்றும் ஏசு சிலை ஒன்றும் புகைப்படத்தில் காணப்படுகிறது. புகைப்படத்தை உற்று நோக்குங்கள். இவர் தான் இந்தியாவின் நலம்விரும்பியா? எனும் கேள்வியுடன் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.



வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது மார்பிங் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்தது. புகைப்படத்தில் அந்த புத்தகத்தின் பெயர், பைபிள் மற்றும் ஏசு சிலை உள்ளிட்டவை விஷமிகளால் மார்பிங் செய்யப்பட்டவை ஆகும். இந்த புகைப்படம் பேஸ்புக்கிலும் வலம்வருகிறது.

இதே புகைப்படத்தை பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா சமீபத்தில் தனது செய்தி ஒன்றில் பயன்படுத்தி இருக்கிறது. அதில் சோனியா காந்திக்கு பின் இருக்கும் அலமாறியில் இந்த புத்தகத்தின் உண்மை பெயர் இடம்பெற்று உள்ளது. மேலும் இதில் பைபிள் மற்றும் ஏசு சிலையும் காணப்படவில்லை.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News