செய்திகள்
கோப்புப்படம்

மே மாதத்தில் போடப்பட்ட தடுப்பூசிகள் பற்றி வெளியான தகவல் தவறானது - மத்திய அரசு விளக்கம்

Published On 2021-06-02 18:15 GMT   |   Update On 2021-06-02 18:15 GMT
மே மாதத்தில் 7 கோடியே 90 லட்சம் தடுப்பூசி கிடைத்ததில், 5 கோடியே 80 லட்சம் தடுப்பூசிகள்தான் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் போடப்பட்டுள்ளன என தகவல் வெளியானதாக தெரிகிறது.
புதுடெல்லி:

மத்திய அரசு ஜூன் மாதத்தில் 12 கோடி தடுப்பூசி வழங்குவதாக உறுதி அளித்துள்ளது, ஆனால் மே மாதத்தில் 7 கோடியே 90 லட்சம் தடுப்பூசி கிடைத்ததில் 5 கோடியே 80 லட்சம் தடுப்பூசிகள்தான் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் போடப்பட்டுள்ளன என சில ஊடகங்களில் தகவல் வெளியானதாக தெரிகிறது.

இது தவறான தகவல், அடிப்படையற்றது என்று மத்திய அரசு மறுத்துள்ளது. இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு:-



* மே 1 முதல் 31 வரையில், 6 கோடியே 10 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் மாநில அரசுகளாலும், யூனியன்பிரதேசங்களாலும் போடப்பட்டுள்ளன.

* மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பாக 1 கோடியே 62 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன.

* 7 கோடியே 94 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

இவ்வாறு அந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News