செய்திகள்
மாணவர்கள்

குஜராத், மத்திய பிரதேசத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

Published On 2021-06-02 11:35 GMT   |   Update On 2021-06-02 13:15 GMT
மாணவர்களின் நலன் கருதி, நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி, உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பிறகு அறிவித்தார்.
காந்திநகர்:

குஜராத்தில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி பிளஸ் 2 பொதுத்தேர்வு ஜூலை 1 முதல் 16 வரை இரண்டு பகுதிகளாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஒரு பகுதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரையும், மற்றொரு பகுதி பிற்பகல் 2.30 முதல் 5.45 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில், மாணவர்களின் நலன் கருதி, நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி, உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பிறகு அறிவித்தார். இதையடுத்து குஜராத் மாநிலத்தில் முதல்-மந்திரி, கல்வி அமைச்சர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல் ஆலோசனையில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், குஜராத்தில் பிளஸ் 2 மாநில பொது தேர்வு ரத்து செய்வதாக அம்மாநில கல்வித்துறை மந்திரி பூபேந்திர சிங் இன்று அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

முதல் மாநிலமாக குஜராத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வு ரத்து குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பொதுத்தேர்வு நிலைப்பாடு குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News