செய்திகள்
ராகுல் காந்தி

கருப்பு பூஞ்சை நோய் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் - ராகுல் காந்தி

Published On 2021-06-01 22:48 GMT   |   Update On 2021-06-01 22:48 GMT
கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீரழித்து விட்டது என காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், நாடு முழுவதும் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயை கையாள்வதற்கான முறைகள் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மூன்று கேள்விகளை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளார்.

ஆம்போடெரிசின் பி மருந்து பற்றாக்குறைக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? நோயாளி ஒருவர் இந்த மருந்தைப் பெறுவதற்கான நடைமுறை என்ன? அவர் எப்படி பெறுவது? சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, வழிமுறைகள் என்ற பெயரில் மக்கள் ஏன் தொந்தரவு செய்யப்படுகிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் கூற வேண்டும் என கோரியுள்ளார்.
Tags:    

Similar News