செய்திகள்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

பீகாரில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு -புதிய தளர்வுகள்

Published On 2021-05-31 08:22 GMT   |   Update On 2021-05-31 08:22 GMT
பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவியதையடுத்து, கடந்த 5ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொற்று குறையாததால் மே 13ம் தேதிக்கு பிறகு ஒவ்வொரு வாரமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ளது. எனினும், தினசரி தொற்று சுமார் 1500 என்ற அளவில் இருப்பதால் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 8ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நிதிஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் வணிகங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக கூறி உள்ளார். பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

பீகாரில் நேற்று ஒரே நாளில் 1475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர். 
Tags:    

Similar News