செய்திகள்
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி

ஒடிசா, மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி

Published On 2021-05-28 10:50 GMT   |   Update On 2021-05-28 10:50 GMT
கலை குண்டாவில் பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்தித்து, புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளித்தார்.
கொல்கத்தா:

வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல் நேற்று முன்தினம் காலையில், ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது, ஒடிசா மாநிலத்திலும், மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

யாஸ் புயலுக்கு 4 பேர் பலியானார்கள். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், புயல் சேத பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். முதலில் ஒடிசாவுக்கு சென்ற அவர், தலைநகர் புவனேஸ்வரில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

அதன்பிறகு, ஹெலிகாப்டரில் பறந்தபடி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் உடனிருந்தார். 

முன்னதாக மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். புயல் பாதிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின்னர் கலை குண்டாவில் பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்தித்தார். அப்போது புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளித்தார்.
Tags:    

Similar News