செய்திகள்
மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு ஜூன் 15-ந் தேதி வரை நீட்டிப்பு

Published On 2021-05-27 18:44 GMT   |   Update On 2021-05-27 18:44 GMT
கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புக்கு ஏற்ப கட்டுப்பாடுகள், ஊரடங்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கொல்கத்தா:

கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புக்கு ஏற்ப கட்டுப்பாடுகள், ஊரடங்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேற்கு வங்காளத்திலும் மே 16 முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த ஊரடங்கு ஜூன் 15-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று அறிவித்துள்ளார். கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றவும் அறிவுறுத்தி உள்ளார்.



தற்போதுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மாநிலத்தில் நிம்மதி நிலையை கொண்டு வருவதை பார்க்கும்போது சிறிது நம்பிக்கை அளிக்கிறது என்று முதல்-மந்திரி கூறி உள்ளார்.
Tags:    

Similar News