செய்திகள்
கொரோனா பரிசோதனை

மும்பையில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை கடந்தது: உயிரிழப்பு குறைந்தது

Published On 2021-05-27 03:33 GMT   |   Update On 2021-05-27 03:33 GMT
மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குறைந்த அளவாக 34 பேர் உயிரிழந்தனர்.
மும்பை :

கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந்து வருகிறது. குறிப்பாக மும்பையில் பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

நேற்று புதிதாக மும்பையில் 1,362 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் மும்பையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 7 லட்சத்து 1,266 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதேபோல 1,021 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகினர்.

இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து 446 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இதேபோல மும்பையில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 34 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நேற்று தான் மும்பையில் குறைந்த அளவு உயிரிழப்பு பதிவாகி உள்ளது. கடைசியாக ஏப்ரல் 13-ந் தேதி 26 இறப்புகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று உயிரிழந்தவர்களுடன் சேர்ந்து இதுவரை 14 ஆயிரத்து 742 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது நிதி தலைநகரில் 27 ஆயிரத்து 943 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோயில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 94 ஆக உள்ளது.

தற்போது நகரில் 44 கட்டுபாட்டு மண்டலங்கள் உள்ளன. மேலும் 200 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News