செய்திகள்
பிரியங்கா காந்தி

பிரதமரை விளம்பரப்படுத்தும் கருவியான தடுப்பூசி - பிரியங்கா கண்டனம்

Published On 2021-05-26 19:18 GMT   |   Update On 2021-05-26 19:18 GMT
தடுப்பூசி திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தடுப்பூசி என்பது பிரதமர் மோடியின் தனிப்பட்ட விளம்பரத்துக்கான கருவியாக பயன்படுவதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி உரையாற்றியபோது, தடுப்பூசிக்கான விரிவான திட்டம் தயாரித்திருப்பதாக கூறினார். அதனால், தடுப்பூசி பணியை மத்திய அரசு சிறப்பாக செய்யும் என்று மக்கள் நம்பினர். ஆனால், தடுப்பூசி திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தடுப்பூசி என்பது பிரதமர் மோடியின் தனிப்பட்ட விளம்பரத்துக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டது. தடுப்பூசி சான்றிதழில் அவரது புகைப்படம் மட்டும் இருக்கிறது. இதர பொறுப்பெல்லாம் மாநிலங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.



உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா, இப்போது தடுப்பூசிகளுக்கு வெளிநாடுகளின் நன்கொடையை எதிர்பார்த்து இருக்கிறது. 6½ கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்றுமதி செய்ததே இதற்கு காரணம். தடுப்பூசி திருவிழா நடத்திய பிறகு, தடுப்பூசி போடுவதில் 83 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை நாடாக இந்தியா மாறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News