செய்திகள்
யோகி ஆதித்யநாத்

தடுப்பூசியை எதிர்த்தவர்கள் இப்போது போட்டுக்கொள்கிறார்கள் - யோகி ஆதித்யநாத் பேட்டி

Published On 2021-05-22 21:35 GMT   |   Update On 2021-05-22 21:35 GMT
தடுப்பூசியை எதிர்த்தவர்கள் எல்லோரும் இப்போது போட்டுக்கொள்வதாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சாடினார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் (பா.ஜ.க.), சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவின் சொந்த ஊரான சபாய் கிராமத்துக்கு நேற்று சென்றார்.

அங்கு அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

அங்கு உத்தரபிரதேச மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு சென்ற யோகி ஆதித்யநாத், புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணியைப் பார்வையிட்டார். நிச்சயிக்கப்பட்டிருந்த நாளுக்கு முன்னதாக பணிகள் முடிவு அடையாததால் அவர் அதிருப்தி தெரிவித்தார். பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னர் தடுப்பூசியை எதிர்த்தவர்கள் (எதிர்க்கட்சியினர்) இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இப்போது தடுப்பூசிக்கு ஆதரவாக மக்கள் வந்துள்ளனர். இந்த தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும். ஒவ்வொருவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை வருவதற்குள் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்பதுதான் அரசின் குறிக்கோள் ஆகும். போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடும் பணிகள், மாநிலத்தில் நடைபெறுகின்றன. சுகாதார பணியாளர்களும், நிர்வாக அதிகாரிகளும் கொரோனாவை மாநிலத்தில் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News