செய்திகள்
நவாப் மாலிக்

‘டவ்தே’ புயலால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் பிரதமர் ஆய்வு செய்யாதது ஏன்?: தேசியவாத காங்கிரஸ் கேள்வி

Published On 2021-05-20 03:20 GMT   |   Update On 2021-05-20 03:20 GMT
குஜராத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று புயல் கரையை கடக்கும் முன்பே இந்த புயல் மகாராஷ்டிராவில் 7 உயிர்களை பலிவாங்கியது.
மும்பை :

அரபி கடலில் உருவான டவ்தே புயல் குஜராத்தில் கரையை கடந்தது. இந்த புயலின் கோர தாண்டவத்தால் குஜராத், யூனியன் பிரதேசமான டாமன் டையு மற்றும் மராட்டியத்தில் கடலோர பகுதிகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி புயலால் பாதிப்புக்கு ஆளான குஜராத் மற்றும் டாமன் டையு பகுதிகளை விமானத்தில் பறந்தபடி நேற்று பார்வையிட்டார்.

இந்தநிலையில் பிரதமர் மகாராஷ்டிரா பகுதிகளை பார்வையிடாதது குறித்து தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:-

குஜராத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று புயல் கரையை கடக்கும் முன்பே இந்த புயல் மகாராஷ்டிராவில் 7 உயிர்களை பலிவாங்கியது. மகாராஷ்டிராவின் சில பகுதிகள் குறிப்பாக கடலோர பகுதிகளில் பயங்கர சேதங்களை ஏற்படுத்தியது.

ஆனால் இன்று(நேற்று) பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மற்றும் டாமன் டையு பகுதிகளில் சுற்றி சுழன்று புயலுக்கு பின் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். ஆனால் அதே நேரம் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட இடங்களை அவர் எட்டிக்கூட பார்க்க மறுப்பது ஏன்? இது தெளிவான பாகுபாடு அல்லவா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News