செய்திகள்
கோப்புப்படம்

டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

Published On 2021-05-17 16:06 GMT   |   Update On 2021-05-17 16:06 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 26,616 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 48211 பேர் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவியது. மகாரஷ்டிராவில் தினசரி பாதிப்பு 60 ஆயிரத்திற்கும் மேலும், டெல்லியில் 20 ஆயிரத்திற்கும் மேலும் உயர்ந்தது.

தற்போது படிப்படியாக கொரோனா தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. இன்று டெல்லியில் 5 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 26,616  ஆக சரிந்துள்ளது. அதேவேளையில் 48,211 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 516 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 54,05,068 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 48,74,582 பேர் குணமடைந்துள்ளனர். 82,486 பேர் உயிரிழந்துள்ளனர். 4,45,495 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News