செய்திகள்
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் மட்டுமே பக்கவிளைவு: ஆய்வில் தகவல்

Published On 2021-05-17 15:15 GMT   |   Update On 2021-05-17 15:15 GMT
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுவதாக தேசிய ஆய்வுக் குழு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது. மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளையும் வழங்கி முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகளுக்கு செலுத்த வைக்கிறது.

இதுவரை இந்த திட்டத்துக்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 20 கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 250 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 460 ஆக உள்ளது.

இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்கவிளைவுகள் மற்றும் இறப்பு நேரிடுவதாக பலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுவதாக நோய்த் தடுப்புக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக் குழு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நோய்த் தடுப்புக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக் குழு (ஏஇஎஃப்ஐ) வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதில் ரத்த உறைதல், ரத்தக்கசிவு அரிதாகவே உள்ளது. மொத்தம் 753 மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கே பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது.



பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிக குறைவாகதான் உள்ளது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியால் ரத்த உறைதல், ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News