செய்திகள்
சித்தராமையா

கொரோனா பரிசோதனையை அரசு அதிகரிக்க வேண்டும்: சித்தராமையா வலியுறுத்தல்

Published On 2021-05-15 03:42 GMT   |   Update On 2021-05-15 03:42 GMT
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசு குறைத்துவிட்டது. அதனால் பாதிப்பு குறைந்துள்ளது போல் தெரிகிறது.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாட்டில் கொரோனா பரவலை தடுக்க 2 மாதங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர் குழு கூறியுள்ளது. கொரோனா பரவலின் சங்கிலித்தொடரை துண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியுள்ளது.

பொதுமக்கள் வீடுகளில் இருக்க வேண்டும். 2 மாத முழு ஊரடங்கிற்கு நான் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டேன். ஆனால் வீடுகளில் முடங்கும் ஏழை மக்களுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

ஏற்கனவே அமல்படுத்தியுள்ள ஊரடங்கிற்கே, உரிய நிவாரணத்தை இந்த அரசு வழங்கவில்லை. கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசு குறைத்துவிட்டது. அதனால் பாதிப்பு குறைந்துள்ளது போல் தெரிகிறது.

அதனால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் பாதிப்பு எவ்வளவு உள்ளது என்பது தெரியும். கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனையை நிறுத்தி விட்டனர்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News