செய்திகள்
கோப்புப்படம்

பாராளுமன்ற கமிட்டி கூட்டம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை நிராகரிப்பு

Published On 2021-05-14 17:13 GMT   |   Update On 2021-05-14 17:13 GMT
பாராளுமன்ற நிலைக்குழுவை கூட்டுவதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்திய நிலையில் துணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர் அதை நிராகரித்துள்ளனர்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள உறுப்பினர்களை உள்ளிடக்கிய பாராளுமன்ற நிலைக்குழு ஒவ்வொரு துறைக்கும் உள்ளது. இந்த கமிட்டி முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் கூட்டத்தை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் நடவடிக்கை எடுத்தாலும், சென்ட்ரல் விஸ்தா திட்டத்தை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் மந்திரி சபை, நீதிமன்றம் மெய்நிகர் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நாடாளுமன்ற கமிட்டியை மெய்நிகர் மூலம் கூட்ட வேண்டும் என்று முக்கியமான எம்.பி.க்கள் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு, மக்களவை எம்.பி. ஓம் பிர்லா ஆகியோருக்கு கடிதம் எழுதினர். 

இந்தநிலையில் தொழில்நுட்பம் மற்றும் ரகசியத்தன்மை ஆகியவற்றை காரணம் காட்டி இரு அவை சபாநாயகர்களும் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

கொரோனா நிலைமை சரியான பிறகு, நேரடியாக கூட்டம் நடத்தப்படும் இல்லையெனில் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படும் என மாநிலங்களவை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் ‘‘இந்த முடிவு குறித்து நான் ஆச்சர்யப்படவில்லை. கடந்த ஒரு வருடமாக பாராளுமன்ற நிலைக்குழுவை மெய்நிகர் மூலமாக கூட்ட கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் விவரிக்க முடியாத வகையில் அனுமதிக்கப்படவில்லை. மோடி மெய்நிகர் கூட்டத்தை நடத்துகிறார். ஆனால், 30 எம்பிக்கள் முடியவில்லை. தற்போது உலகில் எங்கும் பாராளுமன்றம் இந்தியாவைப் போல தனது கடமைகளில் இருந்து ஓடவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News