செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு முறைகள் வெளியீடு

Published On 2021-05-14 12:52 GMT   |   Update On 2021-05-14 12:52 GMT
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான கீழ்கண்ட வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில், தினசரி பாதிப்பு தொடர்ந்து 4 லட்சத்துக்குள் இருந்து வருகிறது. நேற்று 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான  கீழ்கண்ட வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சடலங்களை தொடாமல் மத சடங்குகளை நடத்த அனுமதி அளிக்கலாம்.

மின்மயானங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags:    

Similar News