செய்திகள்
களத்தில் இறங்கிய அரசு பேருந்து ஓட்டுநர்கள்

ஆக்சிஜன் லாரி ஒட்டுநர் பற்றாக்குறை- களத்தில் இறங்கிய அரசு பேருந்து ஓட்டுநர்கள்

Published On 2021-05-14 12:21 GMT   |   Update On 2021-05-14 12:21 GMT
ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஓட்டுநர்களை பயன்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 39,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்தபாதிப்பு எண்ணிக்கை 20,50,880   ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு, இதுவரை  6,150  பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் 4,38,913பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பில்  இருந்து 16,05,471 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மேலும் மாநிலம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.  நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய நேரம் இது . ஆனால் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஓட்ட ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில்,  மருத்துவ திரவ ஆக்ஸிஜனை ஏற்றிச் செல்லும் டேங்கர்களை ஓட்ட கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஓட்டுநர்கள்முன்வந்து உள்ளனர். 2  நாள் பயிற்சிக்கு பின்னர் தற்போது, பாலக்காடு பணிமனையை  சேர்ந்த 35 ஓட்டுநர்களும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த 25  ஓட்டுநர்களும் ஆக்சிஜன் டேங்கர்களை இயக்கி வருகின்றனர். இன்னும் சில ஆம்புலன்ஸ ஓட்டுனர்களாக மாறியுள்ளனர்.
Tags:    

Similar News