செய்திகள்
புலம்பெயர் தொழிலாளர்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க 3 மாநில அரசுகளுக்கு உத்தரவு

Published On 2021-05-14 01:36 GMT   |   Update On 2021-05-14 01:36 GMT
புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள், துயரம் தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
புதுடெல்லி:

புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள், துயரம் தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு திட்டம், வீடு திரும்புவதற்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர கோரி செயல்பாட்டாளர்கள் அஞ்சலி பரத்வாஜ், ஹர்ஷ் மந்தர், ஜெகதீப் சொக்கர் ஆகியோர் இணைந்து தாக்கல் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு வருமாறு:-



கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆத்மநிர்பர் அல்லது வேறேதுனும் திட்டத்தின்கீழ் ரேஷன் பொருட்கள் வழங்க டெல்லி, அரியானா, உத்தரபிரதேச அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். அவர்கள் வீடு திரும்ப விரும்பினால், போக்குவரத்து வசதியை இந்த 3 மாநில அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும். இதுதொடர்பாக ரெயில்வேவுக்கு உரிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணையை மே 24-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
Tags:    

Similar News