செய்திகள்
கோப்புப்படம்

திகார் சிறை : உடனடியாக 18 ஆயிரம் கைதிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் - டெல்லி அரசுக்கு சிறை நிர்வாகம் கடிதம்

Published On 2021-05-14 01:19 GMT   |   Update On 2021-05-14 01:19 GMT
தெற்கு ஆசியாவில் உள்ள மிகப் பெரிய சிறை திகார் சிறை. 3 கி.மீ.-க்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தெற்கு ஆசியாவில் உள்ள மிகப் பெரிய சிறை திகார் சிறை. 3 கி.மீ.-க்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 10 ஆயிரத்து 26 கைதிகளை கையாளலாம். ஆனால் தற்போதைய நிலவரப்படி 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 11- ந் தேதி நிலவரப்படி இங்கு 369 பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் முன்னாள் எம்.பி. உள்பட 6 பேர் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் சிறை நிர்வாகம், டெல்லி அரசின் உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் டெல்லி திகார் சிறையில் 18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு கீழ் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் என்றும், இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News