செய்திகள்
முதல் மந்திரி நிதிஷ்குமார்

பீகாரில் மே 25 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-05-13 21:41 GMT   |   Update On 2021-05-13 21:41 GMT
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தீவிர பரவல் தினமும் அதிகரித்து வருகிறது.
பாட்னா:

பீகாரிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 9 ஆயிரத்து 863 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 3 ஆயிரத்து 500 பேர் இறந்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இதற்கிடையே நோயின் பரவல் அதிகரிப்பதால் முதல் மந்திரி நிதிஷ்குமார் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மந்திரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ஊரடங்கை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வரும் 25-ம் தேதி வரை பீகாரில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிகிறது.
Tags:    

Similar News