செய்திகள்
ராகுல் காந்தி

தடுப்பூசி, ஆக்சிஜனுடன் பிரதமர் மோடி காணாமல் போய்விட்டார் - ராகுல் காந்தி தாக்கு

Published On 2021-05-13 18:09 GMT   |   Update On 2021-05-13 18:09 GMT
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற புதிய கட்டிடம், பிரதமருக்கான புதிய இல்லம் போன்ற கட்டுமான பணிகள் அடங்கிய சென்டில் விஸ்டா திட்டத்தை காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி குறை கூறி வருகிறார்.

இந்நிலையில் தடுப்பூசிகள், கொரோனா மருந்துகள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்ற அர்த்தத்தில் அவர் பிரதமர் மோடி மீது தாக்குதல் தொடுத்தார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தடுப்பூசிகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றுடன் பிரதமரும் காணாமல் போய்விட்டார். சென்டிரல் விஸ்டா பணிகள், மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி., அங்கும், இங்குமாக பிரதமரின் புகைப்படங்கள் ஆகியவை மட்டுமே மிச்சம் இருக்கின்றன என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நதிகளில் மனித உடல்கள் மிதப்பது கூட அரசாங்கத்துக்கு தெரியாத அளவுக்கு புதிய இந்தியாவில் ஒரு சூழ்நிலை வந்துள்ளது. இது ஒரு வெட்கக் கேடு என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News